மணமகளின் தாயுடன் ஓட்டம்பிடித்த மணமகனின் தந்தை: அதிர்ச்சியில் உறவினர்கள்

இரண்டு வாரத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், மணமகளின் தாயுடன் மணமகனின் தந்தை ஓட்டம்பிடித்துள்ள சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளம்ஜோடிக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்துள்ளது.

இவர்களுடைய திருமணம் சூரத்தில் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் மணமகனின் 48 வயதான தந்தையும், மணமகளின் 46 வயதான தாயும் ஒன்றாக ஓடிவிட்டனர், இப்போது 10 நாட்களுக்கு மேலாக காணவில்லை என கூறப்படுகிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வணிகரும், உள்ளூர் அரசியல் கட்சியின் உறுப்பினருமான மணமகனின் தந்தை, ஜனவரி 10 ஆம் தேதி கட்டர்காமில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதே நேரத்தில் ஒரு தரகரை மணந்த மணமகளின் தாய், நவ்சரியில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதுகுறித்து நெருங்கிய உறவினர்களிடம் விசாரித்ததில், பள்ளி பருவத்தில் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வந்ததாகவும் காதலித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஓடிப்போக முயன்றுள்ளனர். இதனை தடுத்து நிறுத்தி, பெண் தனது குடும்பத்தினரால் ஒரு வைர வியாபாரிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.

அந்த ஆணும் ஒரு ஜவுளி தொழிலதிபராக மாறினார், உள்ளூர் அரசியல்வாதியாகி மற்றொரு பெண்ணை மணந்தார்.

இந்த நிலையில் மீண்டும் சந்தித்த இருவரும் ஓடிப்போனதால், இளம் ஜோடியின் திருமணம் நின்றுபோயுள்ளது.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like