யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி பண்ணைக் கடற்கரையில் வைத்து கொலை செய்யப்பட்டமையானது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தாண்டு மருத்துவராகும் கனவோடு படித்துவந்த மாணவியின் உயிர் நொடிப் பொழுதில் பறிக்கப்பட்டிருக்கிறது. இக்கொலையின் பின்னணியில் குடும்பத் தகராறு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட மாணவியின் வாழ்வும் கனவும் சிதைக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை, கொலை செய்வதற்காக குறித்த மாணவியை பண்ணைக் கடற்கரைக்கு வரவழைத்துள்ளார் கொலையாளி.
இக்கொலை ஒரு இராணுவ வீரர் என்பதோடு, அங்கிருந்து தப்பிக்கவும் முயற்சி செய்திருக்கிறார். எவ்வாறாயினும் கொலையாளி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
ஆனால், கொலை செய்வதற்காக அவர் பண்ணைக் கடற்கரையை தெரிவு செய்து அவ்விடத்திலேயே கொலைசெய்விட்டு தப்ப முயற்சி செய்திருக்கிறார். ஒருவேளை அங்கிருந்து அவர் தப்பித்து ஓடியிருந்தால் எவ்வாறான திரிவுபடுத்தல்கள் ஏற்பட்டிருக்கும்.
தமிழர் பகுதி மீதான கருத்தாடல்கள் எவ்வாறு கட்டப்பட்டிருக்கும் போன்ற பல்வேறு பின்னணிகளை ஆராய்கிறது இப்பகுதி,






