மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக திருமதி காலாமதி பத்மநாதன் இன்று பொதுநிர்வாக அமைச்சில் நியமனக்கடிதத்தை பெற்றுள்ளார்.
எதிர்வரும் 27ம் திகதி திங்கள் கிழமை மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக கடமை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை தற்போது அரச அதிபராக கடமை புரியும் மா.உதயகுமார் அவர்களுக்கு இதுவரை இடமாற்றம் தொடர்பாக எந்த உத்தியோகபூர்வ கடதமும் வழங்கப்படாதபோதும் நாளை பெரும்பாலும் இடமாற்றக்கடிதம் அனுப்பப்படும் என எதிர்பார்கப்படுகிறது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானின் நேரடி வழிகாட்டலில் அசாத் மௌலானா அமைச்சுக்கள் ஊடாக முன்னெடுத்ததன் விளைவாக புதிய அரச அதிபர் நியமிக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளர் அசாத் மௌலானா சமீப காலமாக 2015இன் பின்னர் பொது வெளியில் இல்லாதிருந்ததுடன் கட்சியின் பேச்சாளராகவும் செயற்படாத நிலை இருந்தமை குறிப்பிடத் தக்கது.
ஆனால் தற்போது புதிய அரசு ஆட்சி மீடம் ஏறியதும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கை வகுப்பாளர் மற்றும் ஆலோசகர் எனும் கட்சியின் அதி உச்ச பதவியுடன் அசாத் மௌலானா பொது வெளியில் தோன்றியுள்ளார்.
முஸ்லீம்களிற்கு எதிராக கடுமையான நிலைபாட்டை உடைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மீண்டும் முஸ்லீம் நபர் ஒருவரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் மீது கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிள்ளையான் அதிருப்தி கொண்டுள்ளதன் வெளிப்பாடே அசாத் மௌலானா மீண்டும் கட்சிக்குள் நுளைவதற்கு காரணம் என கட்சியின் பிரதித் தலைவர் ஜெயம் உறுதிப்படுத்தினார்.
மிக முக்கிய அரசியல் தொடர்புகளை கட்சியின் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களிற்கு தெரியப்படுத்தாமல் உயர் மட்ட அரசியல் தொடர்புகளை வைப்பதுடன் மொழி ரீதியான ஆளுமை இன்மையுமே இம் மாற்றத்திற்கு காரணம் என மேலும் குறிப்பிட்டார்.
இனி வரும் காலங்களில் மாவட்ட அரச அதிபராக திருமதி காலாமதி பத்மநாதனின் விசேட ஆலோசகராகவும் செயற்படுவார் என்பது குறிப்பிடத் தக்கது.






