ஏற்படவிருந்த மூன்றாம் உலகப் போரை நிறுத்தியது இலங்கை சிறுவனா? ஹாபி வெளிப்படுத்திய உண்மை

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் போர் பதற்றம் ஏற்பட்ட போது அதனை நிறுத்துமாறு கோரி இலங்கையை சேர்ந்த சிறுவன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இலங்கை சிறுவனான ஹாபியின் மின்னஞ்சல் கிடைத்து சில மணி நேரங்களில், ஈரான் மீது போர் தொடுக்கும் எண்ணமில்லை என அமெரிக்க ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த ஹாபி என்ற சிறுவன் இலங்கை வானொலி ஒன்றிற்கு செவ்வி வழங்கியிருந்தார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது,

“அண்மையில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் போர் பதற்றம் ஏற்பட்டது. எனினும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான இந்த மோதலால் குறித்த இரண்டு நாடுகள் மாத்திரம் பாதிக்கப்படாது.

இதனால் உலகம் முழுவதும் வாழும் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை நிறுத்த வேண்டும் என எண்ணினேன்.

இது மூன்றாம் உலக போரை ஏற்படுத்தும் பதற்றமாக ஆரம்பமாகியது. எனினும் இரண்டு நாடுகளும் ஆயுதங்களுக்காக மோதிக்கொள்ளவில்லை என்பதனை நான் நன்கு அறிவேன். ஏன் என்றால் இரண்டு நாடுகளிடமும் மோதலுக்கு முன்னரே ஆயதங்கள் இருந்தன.

இதனால் ஈரான் தலைவருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் மின்னஞ்சல் அனுப்பினேன். என் மின்னஞ்லினாலோ ஏதோ ஒரு காரணத்தினாலோ இந்த பதற்றம் நிறைவடைந்ததே எனக்கு போதும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் ட்ரம்ப் இந்த மின்னஞ்சலுக்கு கவனம் செலுத்தியுள்ளார் என சிறுவனின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.