குப்பைகளின் கூடாரமாக மாறிய யாழ் நகரம்..!! செயல் திறனின்றி தூங்குகின்றதா யாழ் மாநகர சபை..?

ஆரியச்சக்கரவர்த்திகளின் கீழிருந்த இராச்சியங்களில் மிகப்பலம் பொருந்தி இராச்சியமென பெருமையைக் கொண்டது அழகிய யாழ்ப்பாணம் தீவு.

இவ்வாறு அழகிலும், வீரத்திலும் போற்றப்பட்ட அழகிய யாழ்ப்பாணம் தீவு தற்போது குப்பைக் கூழங்களால் சூழ்ந்து நரகமாக மாறி வருவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அழகினால் சூழப்பட்ட யாழ்.நகரம் தற்போது குப்பைகளால் குவிந்து முகம் சுழிக்கும் வகையில் வீணாகியுள்ளது.

இவ்வாறு குவிந்துள்ள குப்பைகள் தொடர்பில் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு குறித்த பகுதிகளிலிருந்து குப்பைகளை அகற்றி தருமாறு பல பகுதிகளிலிருந்தும் மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதியை சுத்தமாக பாதுகாப்பது யாழ் .மாநகர சபையின் பொறுப்பல்லவா..? யாழ் .மாநகர சபை முதல்வரே இது உங்களின் உடனடிக் கவனத்திற்கு..!

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like