யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு சிங்கள மாணவிக்கு நேர்ந்த கதி!

திருநெல்வேலி- சிவன் அம்மன் கோவில் பகுதியில் பல்கலைகழக மாணவியை வழிமறித்த கொள்ளை கும்பல் மாணவியின் பணம் மற்றும் கைதொலைபேசி உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்றிருக்கின்றது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சிங்கள மாணவி ஒருவா் வெளியே சென்றுவிட்டு தனது விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலை யில் சிவன் அம்மன் வீதியில் 3 மோட்டாா் சைக்கிள்களில் நின்ற வழிப்பறி கொள்ளையா்கள் குறி த்த மாணவியை வழிமறித்துள்ளனா். எனினும் மாணவி நிற்காதமல் தொடா்ந்து நடந்து சென்றுள்ளாா்.

இதனையடுத்து மாணவியிடமிருந்த கைப்பை, தொலைபேசி ஆகியவற்றை அடாத்தாக பறித்துள்ளனா். இதனையடுத்து மாணவி கூச்சலிட்டதை தொடா்ந்து கொள்ளையா்கள் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கின்றனா்.

இதன்போது மாணவியில் கைப்பையில் இருந்த விலை உயா்ந்த தொலைபேசி, 7500 ரூபாய் பணம், வங்கி அட்டைகள், பல்கலைகழக மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியன பறித்து செல்ல ப்பட்டுள்ளது. சம்பவம் தொடா்பாக மாணவி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளாா்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like