மத்திய செயல் குழுக் கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலமையில் அவசரமாக 24ம் திகதி கொழும்பில் கூடுகின்றது.

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல் குழுக் கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலமையில் அவசரமாக 24ம் திகதி கொழும்பில் கூடுகின்றது.

கொழும்பில் இடம்பெறவுள்ள குறித்த கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் தொடர்பான விடயம் விசேடமாக ஆரயப்படவுள்ளதோடு உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் அதன் பின்னரான நிலவரங்கள் என்பனவும் தேர்தல் காலத்தில் கட்சியின் சில அங்கத்தவர்களே கட்சிக்கு எதிராகப் பணியாற்றியமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேநேரம் எதிர்கால முன்னெடுப்புக்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளும் அதே நேரம் மத்திய செயல்குழுவிற்கு கட்சி உறுப்பினர்களால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்கள் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம் நாடாளுமன்றில் நிலவும் திடமற்ற நிலையில் கட்சியின் எதிர்காலப்போக்கு என்பவற்றோடு கட்சி வளர்ச்சிக்காகவும் மக்கள் பணிக்காகவும் முன்கொண்டு செல்லவேண்டிய ஏனைய வழிமுறைகள் தொடர்பிலும் கருத்திடப்படலாம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like