மீன் பிடித்துக்கொண்டிருந்த சிறுவனின் கழுத்தை ஊடுருவிய மீன்!

மீன்­பி­டித்­துக்­கொண்­டி­ருந்த ஒரு சிறு­வனின் கழுத்தை நோக்கிப் பாய்ந்த மீனொன்று அச்­சி­று­வனின் கழுத்தை ஊடு­ரு­விய சம்­பவம் இந்­தோ­னே­ஷி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

முஹ் இதுல் எனும் 16 வய­தான சிறுவன் மீன் பிடிக்க சென்­ற­போது, மீனொன்று அச்­சி­று­வனை நோக்கிப் பாய்ந்­தது. அந்த மீனின் வாய் கூர்­மை­யாக இருந்­ததால் அம்மீன் சிறு­வனின் கழுத்தில் குத்தி, கழுத்தின் மறு­பக்கம் சென்­றது.

இந்த மீன் மணித்­தி­யா­லத்­துக்கு 60 கிலோ­மீற்றர் வேகத்தில் தண்­ணீ­ரி­லி­ருந்து வெளியே பாயக்­கூ­டி­ய­தாகும்.
படு­கா­ய­ம­டைந்த இச்­சி­று­வனை அவ­னது பெற்றோர் சுலா­வெசி நக­ரி­லுள்ள மருத்­து­வ­ம­னைக்கு அழைத்துச் சென்­றனர்.

பின்னர் அச்­சி­றுவன் மக்­காசர் நக­ரி­லுள்ள மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்டான். அங்கு இரண்டு மயக்க மருந்து நிபு­ணர்­களும், சுமார் இரண்டு மணி நேரம் போராடி, சிறு­வனின் கழுத்­தி­லி­ருந்து மீனை அகற்­றினர்.

கழுத்தில் மிக முக்­கி­ய­மான இரத்­தக்­குழாய் ஒன்று செல்­வதால் அதை சேதப்­ப­டுத்­தி­வி­டாமல் மிகக் கவ­ன­மாக அந்த மீனை அகற்ற வேண்டியிருந்திருக்கிறது. அச்சிறுவன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.