கணவருடன் தங்கை செய்த காரியம்… அக்கா எடுத்த அதிரடி முடிவு!… என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க

திருச்சியில் நகராட்சியில் வேலை செய்யும் தனது சொந்த சகோதரியை ஆள்வைத்து நான் தான் கடத்தினேன் என பெண் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி, கணவரை இழந்து தனியாக வசித்து வரும் இவர் துவாக்குடி நகராட்சியில் கிளர்க்காகப் பணியாற்றுகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை பணிகளை முடித்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்த இவரினை மர்ம கும்பல் ஒன்று புவனேஸ்வரியை கடத்திச் சென்றுள்ளது.

இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுக்க, பொலிசார் கடத்தியவர்களை மலைக்கோவில் அருகே பிடித்துள்ளனர். இதில் நான்கு பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தனிமையில் வசிக்கும் புவனேஸ்வரிக்கும் அவரின் சகோதரி சரஸ்வதியின் கணவருக்கும் தொடர்பு இருந்து வந்ததும், இதுகுறித்து தனது தங்கையை பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை என்பதால் சரஸ்வதியே ஆட்களை வைத்து கடத்தியது அம்பலமாகியுள்ளது.

அவளை மிரட்டுவதற்காக ஆள்வைத்துக் கடத்தினேன் என சரஸ்வதியும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். கடத்தப்பட்ட நபர்கள் மீது கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

தங்கையைக் கடத்துவதற்காக கொலைக்குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்த பெண் சரஸ்வதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like