கொரோனா வைரஸினால் தங்கத்தின் விலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!

உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிக்கு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய எதிர்வரும் வாரம் ஒரு அவுன்ஸ் தங்கம் 1600 அமெரிக்க டொலரை தாண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

2003ஆம் ஆண்டு சார்ஸ் வைரஸ் பரவிய சந்தர்ப்பத்தில் இவ்வாறு தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டது.

இது தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று அமெரிக்க மத்திய கூட்டத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு வரி அறவீடு மாற்றமடையாமல் பார்த்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பான முதலீடும் தங்கத்தின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

உலக சந்தையில் கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை 1550 அமெரிக்க டொலர் வரை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.