வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக எஸ்.எம்.சமன் பந்துலசேன இன்று பதவியேற்றுள்ளார்.
இதுவரை வவுனியா அரசாங்க அதிபராக இருந்த ஐ.எம் கனீபா பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார்.
இந் நிலையில், அனுராதபுர மாவட்டத்தின் உதவி அரசாங்க அதிபராகவும் பின்னர் வடமத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக இருந்த எஸ்.எம்.சமன் பந்துலசேன, புதிய அரசாங்க அதிபராக பதவியேற்றுள்ளார்.

தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வுகளில் நான்கு மதங்களையும் சேர்ந்த மதகுருமார் ஆசிகளை வழங்கியிருந்தனர்.
அதனை தொடர்ந்து புதிய அரசாங்க அதிபர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆவணங்களில் கையொப்பமிட்டு ஆரம்பித்திருந்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.






