15 வயது தமிழ் மாணவிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்!.. குவியும் பாராட்டுகள்

தமிழகத்தின் அரசு பள்ளி ஒன்றில் பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக 10ம் வகுப்பு மாணவி ஒருவர் ஒருநாள் தலைமை ஆசிரியராக செயல்பட்டுள்ளார்.

மானாமதுரை அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

அப்பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவியான காவ்யா, படிப்பு மட்டுமின்றி மற்றவர்களிடம் பழகும் விதம், வருகை பதிவு உட்பட அனைத்திலும் சிறந்து விளங்கியுள்ளார்.

எனவே பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக கடந்த 25ம் திகதி ஒருநாள் தலைமை ஆசிரியராக செயல்பட்டார்.

அன்றைய தினம் காவ்யாவை வரவேற்ற தலைமை ஆசிரியர், அப்பணி குறித்து விளக்கினார்.

தொடர்ந்து காவ்யா மற்ற ஆசிரியர்களுடன் கலந்துரையாடியதுடன் வகுப்புகளுக்கு சென்று ஆய்வு செய்ததுடன் மாணவ, மாணவிகளுடன் பேசினார்.

படிப்பு மட்டுமல்லாது விளையாட்டு மற்றும் இன்னும் பிற துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என ஆலோசனையும் வழங்கினார்.