பட்டப்பகலில் பதறவைக்கும் சம்பவம்! தமிழ் வர்த்தகரின் மனைவி கழுத்தறுத்துப் படுகொலை

பதுளையில் தமிழ் வர்த்தகர் ஒருவரின் மனைவி கொள்ளைக் கும்பலால் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று முற்பகல் பதுளையை, கைலகொட என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

48 வயதான ரவி கௌரிதேவி என்ற இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இன்று காலை ஆலயத்திற்குச் சென்று வீடு திரும்பியபோது மூன்று இளைஞர்கள் அடங்கிய கொள்ளைக் கும்பலொன்று வீட்டிற்குள் புகுந்து இந்த அராஜக செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.