இலங்கையில் பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்படுமா?

உலகின் மிகப்­ப­ழை­மை­யான தொழி­லாகக் கரு­தப்­படும் பாலியல் தொழில், பல நாடு­களில் சட்­ட­ரீ­தி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள போதிலும், மற்றும் சில நாடு­களில் வரை­ய­றுக்­கப்­பட்ட வகையில் சட்ட ரீதி­யாக்­கப்­பட்­டுள்­ளது. நமது அயல்­நா­டான இந்­தி­யாவில் இத்­தொழில் சட்­ட­ரீ­தி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள அதே­நேரம், பாலியல் தொழி­லுக்கு பெயர் பெற்ற, சுற்­றுலாப் பய­ணி­களை அதி­க­ளவில் ஈர்த்­துள்ள மற்றும் அதன் மூலம் அதிக வரு­மா­னத்தை ஈட்டும் ஆசிய நாடான தாய்­லாந்தில் அது சட்ட விரோ­த­மா­ன­தா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.

இலங்­கையைப் பொறுத்த வரையில், பாலியல் தொழி­லா­னது சட்­ட­வாக்க கட்­டுரை 360(சி) பிரி­வின்­படி, சட்­ட­வி­ரோ­த­மான தடை செய்­யப்­பட்ட தொழி­லா­கவே கரு­தப்­ப­டு­கி­றது. இத்­தொழில் அயல்­நா­டு­களில் உள்­ள­தை­விட இலங்­கையில் ஒப்­பீட்­ட­ளவில் குறை­வா­கவே இருக்­கி­றது. எனினும் ஏறத்­தாழ 40,000 பெண்கள் இலங்­கையில் பாலியல் தொழிலில் ஈடு­பட்டு வரு­வ­தா­கவும், 30,000ற்கும் மேற்­ப­ட்ட பாலியல் வன்­மு­றைகள் பதி­வு­செய்­யப்­ப­டு­வ­தா­கவும் புள்ளி விப­ரங்கள் கூறு­கின்­றன.

அதே­நேரம் ஐக்­கி­ய­நா­டுகள் அபி­வி­ருத்­திக்­கூட்டம், ஐக்­கி­ய­நா­டுகள் சனத்­தொகை நிதியம் என்­பன வேறு சில நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து நடத்­திய ஆய்வின் பிர­காரம் தயா­ரித்­துள்ள 210 பக்­கங்­களைக் கொண்ட அறிக்­கையில் இலங்கை, இந்­தியா, பங்­க­ளாதேஷ், நேபாளம், சீனா, மியன்மார், கம்­போ­டியா ஆகிய நாடு­களில் பாலியல் தொழி­லா­ளர்கள் பொலிஸ் மற்றும் இரா­ணு­வத்தால் துன்­பு­றுத்­தப்­ப­டு­வ­தாகக் கூறப்­பட்­டுள்­ளது.

அநே­க­மான ஆசிய நாடுகள் பாலியல் தொழிலை தடை செய்­துள்­ளதால், பாலியல் தொழி­லா­ளர்கள், சட்­டத்­துக்கு புறம்­பான வகை­யிலும், தலை­ம­றை­வா­க­வுமே இத்­தொ­ழிலில் ஈடு­ப­டு­வதால், எயிட்ஸ் மற்றும் வேறு பால்­வினைத் தொற்­று­க­ளுக்கும் அவர்கள் தள்­ளப்­படும் அபா­யத்தை எதிர்­நோக்­கி­யுள்­ள­தாக அந்த அறிக்­கையில் மேலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் பொது­வாக பாலியல் தொழி­லா­ளர்கள் விப­சார விடு­திகள், நடன கிளப்­புகள், உடல் பிடிப்பு நிலை­யங்கள், நட்­சத்­திர ஹோட்­டல்கள், உல்­லாச விடு­திகள் என்­ப­வற்றை மைய­மாகக் கொண்டு இயங்­கு­கின்­றனர். பின்­தங்­கிய இடங்­களில் சேரிப்­புற வீடுகள், விடு­திகள், ஒதுக்­குப்­பு­றங்கள் என்­ப­வற்­றையும் இவர்கள் தமது தொழி­லுக்­காகக் பயன்­ப­டுத்­து­கின்­றனர்.

வறுமை, ஏமாற்­றங்கள், கண­வரால் மற்றும் குடும்­பத்தால் கைவி­டப்­பட்ட நிலை போன்ற பல்­வேறு கார­ணங்­களால் பெண்கள் பாலியல் தொழி­லுக்கு தள்­ளப்­பட்­டுள்ள போதிலும், வசதி வாய்ப்­பு­க­ளுக்­கா­கவும், ஆடம்­பர வாழ்க்­கைக்­கா­கவும், உல்­லா­சத்­துக்­கா­கவும், இத்­தொ­ழிலில் ஈடு­படும் பெண்­களும் உள்­ளனர்.

கிரா­மப்­பு­றங்­க­ளிலும், பின்­தங்­கிய பகு­தி­க­ளி­லுமி­ருந்து கொழும்பு போன்ற பெரு­ந­க­ரங்­க­ளுக்கு வறு­மையின் நிமித்தம் தொழில் தேடி வரும் பெண்­களும், தவிர்க்­க­மு­டி­யாத சூழ்­நி­லை­களால் தமது வறு­மையை சமா­ளிப்­ப­தற்கும், குடும்­பத்தை கொண்டு நடத்­து­வ­தற்கும் இத்­தொ­ழிலில் ஈடு­ப­டு­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­கி­றார்கள்.

அதே­நேரம் metropolitan Cities எனப்­படும் கொழும்பு போன்ற பெரு­ந­க­ரங்­களில் படித்த, தொழில் செய்யும், வச­தி­யான இளம்­பெண்கள் கூட உல்­லா­சத்­துக்­கா­கவும், மேல­திக வரு­மா­னத்­துக்­காவும் இத்­தொ­ழிலில் ஈடு­பட்டு வரு­வது அதிர்ச்­சிக்­கு­ரிய உண்­மை­யாகும்.

போர்­கா­லப்­ப­கு­தியில் கண­வர்­மாரை இழந்த பல பெண்கள், தமது குழந்­தை­களை காப்­பாற்­று­வ­தற்கும் குடும்ப வறு­மையை போக்­கு­வ­தற்கும் பாலியல் தொழி­லுக்கு தள்­ளப்­பட்ட துர­திஷ்­ட­வ­ச­மான நிலையும் பல இடங்­களில் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. கண­வரால் கைவி­டப்­பட்ட திரு­ம­ண­மான பெண்கள் மாத்­தி­ர­மன்றி, திரு­ம­ண­மா­காத இளம் பெண்கள் கூட தமது குடும்ப சூழ்­நி­லைகள், வறுமை கார­ண­மாக இத்­தொ­ழிலில் ஈடு­ப­டு­கின்­றனர்.

கண­வரை இழந்த பெண்­ணொ­ருவர் தனது 6 பிள்­ளை­களை பரா­ம­ரிப்­ப­தற்­காக பாலியல் தொழிலில் ஈடு­பட்டு வரு­வ­தாகக் கூறு­கிறார். சாதா­ரண தொழில் மூலம் கிடைக்கும் மாத வரு­மா­னத்தில் தனது பிள்­ளை­க­ளையும் பரா­ம­ரித்து, நாளாந்த செலவை ஈடு­கட்ட முடி­யா­ததால், எவ­ரது உத­வி­களும் அற்ற நிலையில் இத்­தொ­ழிலில் ஈடு­பட தான் நிர்­பந்­திக்­கப்­பட்­ட­தா­க கூறு­கிறார். தம்­மிடம் வரும் ஆண்­களின் தேவை­களை பூர்த்தி செய்ய வேண்­டிய கட்­டா­யத்­துக்கு உள்­ளா­கி­யுள்ள தாம், சமூ­கத்தில் உள்ள ஏனை­ய­வர்­களின் கீழ்த்­த­ர­மான பார்­வைக்கும், இழி­சொற்­க­ளுக்­கும ஆளா­கி­யி­ருப்­பது வேத­னைக்­கு­ரிய விட­ய­மென்­றாலும், குடும்ப சூழ்­நிலை கார­ண­மாக தம்மால் இத்­தொ­ழி­லி­ருந்து மீண்டு வர முடி­யாத நிலையில் இருப்­ப­தாகக் கூறு­கிறார்.

அதே­போல தன்­னு­டைய கண­வ­ரது வரு­மானம், பிள்­ளை­க­ளையும் குடும்­பத்­தையும் சமா­ளிக்கப் போது­மா­ன­தாக இல்­லை­யா­தலால், அவ­ருக்குத் தெரிந்தே இத்­தொ­ழிலில் ஈடு­ப­டு­வ­தாக 4 பிள்­ளை­களின் தாயா­ரான மற்­றொரு பெண் கூறுகிறார். மண்­வீட்டில் கணவர் மற்­றும் பிள்­ளை­க­ளுடன் வசிக்கும் இவர், தமக்கு வீடொன்றை பெற்றுத் தரு­வ­தற்கு யாரா­வது உத­வு­வார்­களா எனவும் கோரிக்கை விடுக்­கிறார்.

இந்­நி­லையில் வாய்­பேச முடி­யாத மற்­று­மொரு பெண், கண­வ­ரது துன்­பு­றுத்­தல்­க­ளுக்கும், சித்­தி­ர­வ­தை­க­ளுக்கும் ஆளான நிலையில், தமது 3 பிள்­ளை­களை காப்­பாற்­று­வ­தற்­காக இத்­தொ­ழிலில் ஈடு­பட்டு வரு­வ­தாக, கண்­ணீர்­மல்க கண்­களைத் துடைத்­த­படி செய்கை மூலம் காண்­பித்தார்.

திரு­ம­ண­மான பெண்கள் மாத்­தி­ர­மன்றி, தமது காத­லரால் ஏமாற்­றப்­பட்ட அல்­லது தொழில் நிமித்தம் அழைத்துச் செல்­லப்­பட்டு முக­வர்­களால் ஏமாற்­றப்­பட்ட அல்­லது பாலியல் வல்­லு­ற­வுக்கு உள்­ளாக்­கப்­பட்ட அல்­லது பல்­வேறு எதிர்­பா­ராத துர்­பாக்­கிய சம்­ப­வங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க நேரிட்ட இளம் பெண்கள் கூட செய்­வ­த­றி­யாத நிலை­யிலும், தமது வாழ்­வா­தா­ரத்­துக்­கான பணத்தை தேடிக்­கொள்­வ­தற்­கா­கவும் பாலியல் தொழிலில் ஈடு­பட வேண்­டிய கட்­டா­யத்­துக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கி­றார்கள்.

இது இவ்­வாறு இருக்­கையில், கொழும்பு போன்ற பெரு­ந­க­ரங்­களில் படித்த, உயர்ந்த நிறு­வ­னங்­களில் தொழில் செய்யும் இளம் பெண்கள் சிலர் கூட, உல்­லா­சத்­துக்­கா­கவும், மேல­திக வரு­மா­னத்­துக்­கா­கவும், தமது ஆடம்­பர வாழ்க்­கைக்­கான செல­வு­களை ஈடு­கட்­டு­வ­தற்­கா­கவும், ஒரு பொழு­து­போக்­கான விடயம் போல இத்­தொ­ழிலில் ஈடு­ப­டு­கின்­றனர்.

தமது அலு­வ­லக தொழில் நேரம் முடிந்த பின்­னரும், வார இறுதி விடு­முறை நாட்­க­ளிலும் தமக்­கான பெரும் பணக்­கார வாடிக்­கை­யா­ளர்­களை தேடிக்­கொள்ளும் இவர்கள், நடன கிளப்­புகள், சொகுசு ஹோட்­டல்கள், நட்­சத்­திர விடு­தி­களில் அவர்­க­ளுடன் பொழுதைக் கழிப்­பதன் மூல­மாக ஆயி­ரக்­க­ணக்­கான ரூபாய்­களை மாத்­தி­ர­மல்ல சில­வே­ளை­களில் லட்­சங்­களில் கூட வரு­மா­னத்தை பெற்­றுக்­கொள்­கின்­றனர். இதனை அவர்கள் தமது சுக­போக வாழ்க்­கைக்கும், ஆடம்­ப­ரத்­துக்கும் பயன்­ப­டுத்திக் கொள்­கின்­றனர்.

இலங்­கையில் பாலியல் தொழி­லா­ளர்கள் ஏரா­ள­மாக உள்ள நிலையில், கலா­சார மற்றும் மத அம்rசங்­களின் அடிப்­ப­டையில் அவர்கள் கண்­டனம் செய்­யப்­பட்­டாலும், அவர்­க­ளது இருப்பை யாராலும் மறுக்க முடி­யாது.

இலங்­கையில் பாலியல் தொழில் சட்­ட­வி­ரோ­த­மான நட­வ­டிக்­கை­யாக கரு­தப்­படும் நிலையில், கைது செய்­யப்­படும் பாலியல் தொழி­லா­ளர்கள் பல்­வேறு துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளா­வ­தோடு சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கை­க­ளுக்கும் உட்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள். எனவே இத்­தொ­ழிலை சட்ட ரீதி­யாக்­கு­மாறும், பாலியல் தொழி­லா­ளர்­க­ளுக்கு உரிய பாது­காப்பை வழங்கி, இத்­தொ­ழி­லுக்கு அங்­கீ­கா­ரத்தை வழங்­கு­மாறும், சில நிறு­வ­னங்­களால் பல்­வேறு கோரிக்­கைகள் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்டு வந்த போதிலும், இலங்கையில் பாலியல் தொழில் இது வரை அங்கீகரிக்கப்படவில்லை என்பதே உண்மை.

பாலியல் தொழில் காரணமாக, எயிட்ஸ் மற்றும் பால்வினைத் தொற்றுகள் பரவி வரும் நிலையில் அது சமூகத்தில் அபாயகரமான விளைவுகளை யும் ஏற்படுத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி ஆசிய கண்டத்தில், தொன்மையான கலாசார பாரம்பரியத்தைத் கொண்ட இலங்கையில் எமது மதம், ஒழுக்கநெறிகள், கட்டுக்கோப்புகளுக்கு அமைய அது கலாசார சீரழிவுகளையும், எதிர்கால இளம் சந்ததியினர் மத்தியில் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும்.

இந்நிலையில் பாலியல் தொழில் இலங்கையில் சட்டரீதியாக்கப்படுமா, மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுமா என்பது வினா மாத்திரமல்ல, விவாதத்திற் குரிய ஒரு விடயமுமாகும்.

-கௌரி பிருந்தன்