கொழும்பில் கொரோனா வைரஸ் தாக்கமா? வெளியாகியுள்ள காணொளியால் பெரும் சர்ச்சை

கொழும்பு – உலக வர்த்தக நிலையம் அமைந்துள்ள கட்டடத்தில் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில், சுகாதார அதிகாரிகள் அழைத்துச் செல்லும் காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகமே நிலவுகின்ற நிலையில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எவ்வாறாயினும், இலங்கையில் இரண்டு பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் face mask விற்பனை தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 3000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஜப்பான், கொரியா, தாய்லாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்கம் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.