இலங்கையில் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும்!

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு சீன நபர் கண்டறியப்பட்டதை அடுத்து பாடசாலைகளை மூட அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று வெளிவரும் வதந்திகளில் உண்மை இல்லை என்று சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து சீனாவின் வுஹானில் உள்ள 28 இலங்கை மாணவர்கள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இலங்கை தூதரகம் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள அதிகாரிகள் அவர்களின் உடல்நலம்,உணவு மற்றும் பிற தேவைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

இருப்பினும், வுஹானில் உள்ள 557 இலங்கையர்களில் 204 பேர் ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.