புகையிலைக்கு பதிலாக யாழில் மாற்றுப் பயிர்கள் அறிமுகம்….!!

யாழ்.மாவட்­டத்தில் புகை­யிலை பயிர்ச் செய்­கைக்கு பதி­லாக கற்­றாழை மற்றும் நீண்­ட­காலம் பயன் தரக்­கூ­டிய மிளகாய் செய்­கையும் என்­பன அறி­முகம் செய்­யப்­ப­ட­வுள்­ளன.

இதன் முதற்­கட்­ட­மாக, கற்­றாழைப் பயிர்ச் செய்கை வேலணைப் பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்டு நல்ல வளர்ச்சி நிலையை அடைந்­துள்­ள­தாக மாவட்ட விவ­சாய போத­னா­சி­ரியர் திரு­மதி சசி பிரபா கைலேஸ்­வரன் தெரி­வித்தார்.
மேலும், 2020 ஆண்­டுடன் புகை­யிலைப் பயிர்ச்­செய்­கையை நிறுத்­து­வ­தற்கு அரசு தீர்­மா­னித்­துள்­ளதால் அதற்கு பதி­லாக கற்­றாழை மற்றும் நீண்­ட­காலம் நின்று பயன்­தரும் மிளகாய்ச் செய்கை என்­பன அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது.
வறள் நிலத் தாவ­ர­மான கற்­றா­ழையை தோட்ட நிலத்தில் மட்­டு­மல்ல திருத்தி அமைக்­கப்­ப­டாத நிலங்­க­ளிலும் செய்கை பண்­ணலாம். கற்­றாழை ஒரு கிலோ கிராம் 150 ரூபா­வுக்கு மேல் விற்­ப­னை­யா­கின்­றது.

நல்ல விளைச்­சலில் ஒரு மடல் தண்டு 700 கிரா­முக்கு குறை­யாத நிறை உடை­ய­தாக இருக்கும். செய்­கையில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு ஊக்­கு­விப்பு உத­விகள் மற்றும் சந்­தைப்­ப­டுத்தல் வச­திகள் செய்து தரப்­படும் எனவும் மாவட்ட விவ­சாய போத­னா­சி­ரியர் திரு­மதி சசி பிரபா கைலேஸ்­வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like