கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளங் காணப்பட்ட சீன பெண்ணின் உடல் நிலை தேறி வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்மணி ஆபத்தான கட்டத்திலிருந்து தப்பியுள்ளதாக அங்கொட வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில நாட்களில் அவர் வழமை நிலைக்கு திருப்புவார் என மருத்துவ அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தீவிரம் அடைந்துள்ளமையினால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். சீனாவில் இதுவரை 132 பேர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான சீனப் பெண் அடையாளம் காணப்பட்டார்.
இலங்கையிலும் இந்த வைரஸ் தாக்கம் தீவிரம் அடையும் என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருந்த நிலையில், குறித்த பெண்மணியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.






