தாயின் இறுதிச் சடங்கின் போது மயங்கி விழுந்து மகன் மரணம் – யாழில் சம்பவம்!

தாயின் இறுதிக் கிரியை செய்ய கனடாவில் இருந்து வந்திருந்த மகன் இறுதிச் சடங்கின் போது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமானார்.

மல்லாகம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கனடா பிரஜா உரிமை பெற்ற இராசையா பத்மவேல் (வயது-44) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளவர் ஆவார்.
பத்வேல் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயரிழந்த தனது தாயின் இறுதிக்கிரியைக்காக மனைவியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை கட்டுவன் வீதி-மல்லாகத்தில் உள்ள அவரது வீட்டில் தாயின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது.
கிரியைகள் முடிந்து தாயின் சடலத்தை தூக்கிச் செல்ல முற்பட்ட போது நெஞ்சுவலியால் அவரது மகன் மயங்கிச் சரிந்து உயிரிழந்தார். இதனையடுத்து உயரிழந்த தாயின் தகனக்கிரியையும் நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

உயரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like