கனா காணும் காலங்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் நடிகர் யுதன் பாலாஜி.
இவரின் காதல் வாழ்க்கை குறித்து சில சுவாரஷ்யமான தகவல்கள் ஊடகங்களில் உலாவி வருகின்றது.
நடிகர் யுதன் பாலாஜி கடந்த 2016 ஆம் ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி மனஸ்தா பங்களுக்கும், சண்டைகளும் ஏற்பட்டுள்ளது.
இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தார்கள். இவர்கள் காதலர் தினத்தில் தான் பிரிந்துள்ளனர்.
பின் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று தன்னுடைய மனைவியை அதிகாரப்பூர்வமாக பிரிவதாக பாலாஜி அறிவித்துள்ளார்.
திருமணம் முடிந்து இரண்டு வருடத்திலேயே யுதன் பாலாஜி விவாகரத்து செய்து கொண்ட விஷயம் சினிமா உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுவாகவே காதலர்கள் தினத்தில் கிப்ட் கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். ஆனால், இந்த இளம் திருமண ஜோடிகள் தங்களுடைய வாழ்க்கைக்கு குட்பை சொல்லி இருக்கிறார்கள்.
இது குறித்து அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, எப்போதும் போல காலையில் எழுந்து கோர்ட்டிற்கு சென்றேன். விவாகரத்து எங்களுக்கு கொடுத்து விட்டார்கள்.
நாங்கள் இருவரும் சேர்ந்து தான் இந்த முடிவு எடுத்தோம். காதலர் தினத்திற்கு இப்படி கடவுள் எனக்கு வித்தியாசமான பிளானை போட்டு இருக்கிறார் என்று எனக்கு தெரியாது.
உங்கள் எல்லோருக்கும் என்னுடைய காதலர் தின வாழ்த்துக்கள் என சோகத்துடன் கூறியிருந்தார். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு காதல் பரிசா என்று அதிர்ந்து போயுள்ளனர்.






