சீனாவில் நபர் ஒருவரால் வீசி எறியப்பட்ட பெரும்தொகை பணம்! காரணம் என்ன தெரியுமா?

சீனாவின் ஹார்பின் மாகாண மருத்துவமனைக்கு ஒரு புற்றுநோய் நோயாளி பணம் நிறைந்த ஒரு பையை சுமந்துகொண்டு சென்று தனது உயிரைக் காப்பாற்றும்படி மருத்துவரிடம் கேட்டார்.

மருத்துவருக்கு பணம் கொடுக்க அவரிடம் நிறைய பணம் இருக்கிறது. எனினும் அவரது புற்றுநோய் இறுதிக் கட்டத்தில் இருப்பதால் அவரால் எதுவும் செய்ய முடியாது என மருத்துவர் கூறினார்.

இதனையடுத்து மிகவும் கோபமாகவும் விரக்தியுடனும் இருந்த அந்த நபர், பணத்தை மருத்துவமனையின் முழு நடைபாதையிலும் எறிந்துவிட்டார்.

பணம் பணம் என அலைபவர்களிற்கு இது நல்ல ஒரு பாடம். கோடி கோடியாக பணம் வைத்திருந்தாலும் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்கிவிட முடியாது.

பணத்தால் நேரத்தை வாங்க முடியாது, பணத்தால் வாழ்க்கையை வாங்க முடியாது.

நம்மிடம் நேரமும் பணமும் இருக்கும்போது நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவது மிகவும் அவசியம்.

ஆரோக்கியமே எப்பொழுதும் நிறைந்த செல்வம். பணக்காரனாக இருப்பதை விட ஆரோக்கியமே முக்கியம்.