கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுக்கும் முக்கியஸ்தரின் பகீர் வீடியோ

நேற்று முந்தினம் நடைபெற்ற கரைச்சி பிரதேச சபையின் கடந்த விசேட அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்களிக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.

அதிகளவிலான வரிசுமை காணப்படுவதாக ஆதனவரி அறவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில், வர்த்தகர் ஒருவர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது குறித்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், EPDP இன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தலைமையிலான பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்போது சந்திரகுமார் அணியின் உறுப்பினர் மோகன்ராஜ் அவர்கள் தடுப்பு காவலுக்கு போகாத முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளையும், தடுப்பு காவலுக்கு போகாத முன்னாள் போராளியும் இந்நாள் கூட்டமைப்பின் பிரதேச சபையின் உறுப்பினருமான சிவகுமார் அவர்களையும் தடுப்பு காவலிற்கு அனுப்புவேன் என ஆவேசமாக சபதம் எடுத்துள்ளார்.

இவர்கள் அனைவரும் ஈ.பி.டி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் வளிநடத்தலில் செயற்படும் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குவாதம் இடம் பெற்ற போது முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளை கதைக்க வேண்டிய தேவை இல்லை, ஆனால் மிக கீழ் தரமாக பிரதேச சபையின் உறுப்பினர் மோகன்ராஜ் பேசுவது ஈ.பி.டி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் உண்மை நிலையை மக்களுக்கு வெளிக்காட்டியுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இப்படியான தமிழ்இனத்தை காட்டிக்கொடுப்பவர்கள் எதற்காக மாவீரர் நாள் மற்றும் தமிழர்களின் உணர்வுள்ள நாட்களை கடைப்பிடிப்பது போன்று பாசாங்கு செய்கிறார்கள் என்று சந்திரகுமார் அணி மீது சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மக்களை ஏமாற்ற மாவீரர் நாள் மற்றும் தமிழர்களின் உணர்வு நாட்களில் கலந்து கொள்வது போல பாசாங்க செய்யாமல், அவைகளை தவிர்த்து விட்டு இப்படியான உண்மை முகத்துடன் சந்திரகுமார் அணி வலம் வருவது காலத்திற்கு உகந்தது என மேலும் மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.