குழந்தையின் அழுகுரல் சத்தத்தை தாங்கமுடியாமல் தாத்தா- பாட்டி செய்த கொடூர சம்பவம்.. விசாரணையில் அதிர்ந்துபோன பொலிசார்!

11 மாத குழந்தையின் அழுகை சத்தம் தாங்க முடியாமல், பாட்டி அடிப்பில் குழந்தையை வீசி கொன்றுள்ள சம்பவம் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது.

ரஷ்யாவின் ஹக்காசியா பகுதியை சேர்ந்தவர் விக்டோரியா சாகலகாவ். 20 வயது நிறைந்த இவர் தனது 11மாத கைக்குழந்தையை தாய் மற்றும் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

அந்த நேரத்தில், குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. குழந்தை அமைதியாக இல்லாததால் மதுபோதையில் இருந்த அதன் பாட்டி ஜன்னா என்பவர் குழந்தை அழுகையை நிறுத்து போராடியுள்ளார். அனைத்தும் தோல்வியில் முடிய மூச்சை அடைத்து பிடித்துள்ளார்.

இதனால் குழந்தை மயங்கியநிலைக்கு சென்றுள்ளது. பின்னர் குழந்தையை அதன் தாத்தா அலெக்சாண்டர் மியாகசேவ் என்பவர் விறகுகளை எரிக்கும் அடுப்பில் வைத்து எரித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சந்தேகமடைந்த பக்கத்துவீட்டுகாரர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

மேலும், தீவிர விசாரணை மேற்கொண்டபோது ஜன்னா மூச்சை அடைத்த பின்னரும் குழந்தை உயிருடன் இருந்துள்ளது எனவும், அடுப்பில் வீசப்பட்ட பின்னரே துடிதுடித்து உயிரிழந்தது என்பதும் உறுதிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வழக்கை நன்கு கேட்டறிந்த நீதிபதி அலெக்சாண்டருக்கு 15 ஆண்டும், ஜன்னாவிற்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.