கொரோனா வைரஸால்! உயிரைப் பணயம் வைத்து கதறி அழுது பயணமாகும் மருத்துவர்களின் பரபரப்பு காணொளி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சைக்காகச் செல்லும் மருத்துவர்களை அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க வழியனுப்பிவைக்கும் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது மொத்த உலகையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மட்டும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 259 பேர் உயிரிழந்துள்ளனர்.

11,791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தற்போது இந்தியா உட்பட 15-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால் உலக மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

சீனாவில் இருக்கும் பிற நாட்டு மக்களை மீட்பதற்காக அந்தந்த நாட்டு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவிலிருந்து சீனா சென்ற சிறப்பு விமானம் 300-க்கும் அதிகமான இந்திய மக்களை வெற்றிகரமாகத் தாயகம் கொண்டு வந்து சேர்த்துள்ளது. பிற நாடுகளில் நிலைமை இப்படி இருக்க, வைரஸ் உருவான சீனாவில் நிலை சொல்ல முடியாத அளவு படு மோசமாக உள்ளது.

உள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்!

வுகான் நகரம் முழுவதும் மயான அமைதியாகக் காணப்படுகிறது, திரும்பும் திசையில் ஆள் நடமாட்டமின்றி அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கியுள்ளனர். போக்குவரத்து, கடைகள், விற்பனை போன்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

சாலையில் சுற்றித் திரியும் ஓரிரு மக்களும் முகமூடி அணிந்துகொண்டு நடக்கின்றனர். வுகான் நகரம் முழுவதும் பள்ளி, அலுவலகம் போன்ற அனைத்துக்கும் காலவரையின்றிப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த நேரத்தில் தங்களுக்கு என்ன நேருமோ என்ற அச்சத்திலேயே மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

சில நாள்களுக்கு முன்னர் சீனாவில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.

அவற்றில், சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கும் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழக்கிறார். ஏனெனில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.

அவர் விழுவதை அறிந்த மக்கள் யாரும் உதவி செய்ய அருகில் கூட செல்லவில்லை. அதையும் மீறிச் சென்றால் உதவுபவருக்கும் வைரஸ் தொற்று ஏற்படும்.

இதனால் மருத்துவர்கள் வந்து பாதிக்கப்பட்டவரைத் தூக்கிச் செல்லும்வரை அவர் அதே இடத்தில் கிடக்கிறார்.

`விமானத்தில் ஒரே ஒரு சென்னை மாணவி; நடுக்கடலில் தவிக்கும் கப்பல்!’- உலக மக்களை உறையவைக்கும் கொரோனா

`விமானத்தில் ஒரே ஒரு சென்னை மாணவி; நடுக்கடலில் தவிக்கும் கப்பல்!’- உலக மக்களை உறையவைக்கும் கொரோனா

இப்படியான பல வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இதே வேளையில் அதே சீனாவில் எடுக்கப்பட்ட மற்ற புகைப்படங்களும் வீடியோக்களும் பார்ப்பவர்கள் மனதை உருக்கும் விதமாக உள்ளன.

சீனாவின் பிற நகரங்களைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் எனப் பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வுகான் நகருக்குச் செல்கிறார்கள். அப்படிச் செல்லும் தன்னார்வலர்களை அவர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் கனத்த இதயத்துடன் வழியனுப்பி வைக்கின்றனர்.

கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மை கொண்டது. அதனால் வைரஸால் பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் எப்போதுவேண்டுமானாலும் இந்த வைரஸ் தொற்று ஏற்படலாம்.

எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கு மரணம் நிச்சயம் எனத் தெரிந்தே மருத்துவர்கள் செல்கின்றனர்.

தங்களின் அன்பிற்குரியவர்கள் திரும்ப வரப்போவதில்லை எனத் தெரிந்தே அவர்களின் உறவினர்கள் மருத்துவர்களை வழியனுப்பிவைக்கிறார்கள். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கண்ணீர் வரவழைப்பதாக உள்ளன.

ஸ்பெஷல் மெடிக்கல் கிட்.. வைரஸ் இருந்தால் `நோ’ அனுமதி!- இந்தியர்களை மீட்க சீனா பறக்கும் ஏர் இந்தியா

தற்போது சீன மருத்துவர்கள் செல்லும் இந்தப் பயணத்தை செர்னோபில் அணு உலை விபத்தில் பணியாற்றிய வீரர்களுடன் ஒப்பிடுகிறார்கள் நெட்டிசன்கள். உக்ரைனில் உள்ள செர்னோபில் என்ற பகுதியிலிருந்த அணு உலையில் 1986-ம் ஆண்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

உலகிலேயே மிகப் பெரும் அணு உலை விபத்து இது எனக் கூறப்பட்டது. இதனால் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களில் அணு கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தவர்களே அதிகம்.

அணு உலையில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதற்காகவும் தீயை அணைப்பதற்காகவும் சில தீயணைப்பு வீரர்கள் மட்டும் தைரியமாக அணு உலையினுள் சென்றனர். உள்ளே சென்றால் மரணம், மீண்டும் வரமாட்டோம் என்பதை நன்கு அறிந்தே அவர்கள் சென்றனர்.

அவர்களில் சிலர் திரும்பி வரவில்லை, வந்தவர்களில் சிலர் அணு கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டு அடுத்த சில நாள்களில் உயிரிழந்தனர். செர்னோபில் வீரர்களை இன்றும் உக்ரைன் மக்கள் ஹீரோக்களாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இவர்களைப் போலவே தற்போது சீன மருத்துவர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பிற நோயாளிகளைக் காப்பதற்காகச் செல்கிறார்கள்.

மருத்துவர்களின் இந்தச் செயலை `தற்கொலைப் படை’ `வீரமிக்க செயல்’ என்று கூறுகின்றனர்.

பிறரின் உயிரைக் காக்கச் செல்லும் மருத்துவர்களுக்கும் அவர்களை வழியனுப்பிவைக்கும் உறவினர்களுக்கும் பாராட்டுகளுக்கும் அனுதாபங்களும் குவிந்து வருகின்றன. மருத்துவர்களின் இந்த தைரியமான முடிவுக்கு சல்யூட் எனச் சில நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.