பெண்களின் பிரதிநிதித்துவ விகிதத்தில் மாற்றம் வேண்டாம்! ​ரோசி சேனநாயக்க கோரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பெண்கள் பிரநிதித்துவ விகிதாசாரம் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டாம் என்று ரோசி சேனநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்தும் 25 வீதம் கட்டாயம் இருக்க வேண்டும் எனும் விதி காரணமாக இம்முறை நடைபெற்ற தேர்தலின் பின்னர் பல்வேறு உள்ளூராட்சி மன்றங்கள் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.

இதன் காரணமாக குறித்த சட்டவிதியை தளர்த்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அதனை தளர்த்தவோ, திருத்தவோ வேண்டாம் என்று ரோசி சேனநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ரோசி சேனநாயக்க கடிதமொன்றையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பெண்களின் பிரதிநிதித்துவ விகிதத்தில் மாற்றம் வேண்டாம்! ​ரோசி சேனநாயக்க கோரிக்கை