பிரபல ரௌடி வெட்டிக்கொலை: இலங்கை அகதி கைது

பிரபல ரௌடி வெட்டிக்கொலை: இலங்கை அகதி கைது

இந்தியா – பெரம்பலூரில் பிரபல ரௌடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் திருநகரை சேர்ந்த 34 வயதுடைய ரெளடி பன்னீர்செல்வத்தை மர்ம கும்பல் ஒன்று புதன்கிழமை இரவு வெட்டிக் கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த நிலையில், கதிரவன்(23), வினோத்(23), விக்னேஷ்(23) ஆகியோர் புதன்கிழமை இரவு பெரம்பலூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

எனினும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய குற்றவாளிகளை பெரம்பலூர் பொலிஸார் தேடி வந்தனர்.

இவ்வாறான நிலையில், பெரம்பலூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சற்குணராஜா என்பவரின் மகனான 25 வயதுடைய நகுலேஸ்வரன், தமிழ்ச்செல்வனின் மகன் யேசுதாஸ்(25), மணிகண்டன்(25) ஆகியோரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட பன்னீர்செல்வம் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், முன் விரோதம் காரணமாக வினோத் தனது நண்பர்களுடன் சேர்ந்து பன்னீர்செல்வத்தை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like