சென்னையில் கடன் தொல்லை காரணமாக சொந்த வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த மீன் வியாபாரியான கரிகாலன். இவரது மனைவி முனியம்மாள்(46). இவர்களுக்கு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளனர். முனியம்மாளின் அண்ணன் ஆறுமுகம்(50). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகின்றது.
கடந்த 5 மாதத்திற்கு முன்பு மகளுக்கு திருமணம் செய்த இவர்கள் அதற்காக வீட்டின் மீது ரூபாய் 7 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனர். பின்பு கரிகாலனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் கடன் அடைக்கமுடியாமல் தவித்த இவர்கள், வீட்டை விற்பதற்கு முடிவு செய்துள்ளனர்.
இதற்கு கரிகாலனின் மகன் சம்மதிக்காமல் வீட்டில் சண்டை போட்டுவிட்டு, இறுதியில் வீட்டை விட்டே சென்றுள்ளார். இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த சொந்த வீட்டை விட்டு வெளியிறங்க மனமில்லாத தம்பதிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பின்பு பொலிசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்த பின்பு, பொலிசார் வந்த பார்க்கையில் வாசலில் முனியம்மாளின் அண்ணன் ஆறுமுகம் விஷமருந்து தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.