மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தொழிற்திறன் கண்காட்சி – 2018 (படங்கள்)

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவால் நடாத்தப்படும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தொழிற்திறன் கண்காட்சி – 2018
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவால் நடாத்தப்படும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தொழிற்திறன் கண்காட்சி –2018 புளியங்கூடல் மகாமாரி இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலக செயலாளர்  திருமதி மஞ்சுளாதேவி சதீஷன் தலைமையில் 15.02.2018 அன்று காலை 10.00 மணியளவில் சிறப்புற நடைபெற்றது.
கண்காட்சி மண்டபத்தினை நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன் அவர்கள் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன் அவர்கள் மற்றும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் ஆகியோரும், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. நா. பஞ்சலிங்கம் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக ஊர்காவற்றுறை பிரதேசசபையின் முன்னாள் செயலாளரும் புளியங்கூடல் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவருமான் திரு. கு. கணேசலிங்கம் மற்றும் புளியங்கூடல்  ஸ்ரீ இராஜ மனோகரி அம்பாள் தீருக்கோவில் அறங்காவலர் திரு. சிவஞானச் செல்வன் செந்தூரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் பதிவுகளைப் படங்களில் காணலாம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like