திரிணாமுல் தலைவர் தலைமையில் ரோட்டில் இழுத்து செல்லப்பட்ட ஆசிரியை.!

மேற்கு வங்க மாநிலத்தில் சார்ந்த ஸ்மிரிகோனா தாஸ் என்ற ஆசிரியை வீட்டு முன் அமைக்கவுள்ள சாலை 12 அடி அகலமாக இருக்கும் என முதலில் கூறினர்.

அதற்கு ஸ்மிரிகோனா தாஸ் அனுமதி கொடுத்தார்.
ஆனால் சாலையை 24 அடிக்கு அகலப்படுத்த முடிவு செய்ததால் அதற்கு ஸ்மிரிகோனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தினாஜ்பூர் மாவட்டத்தின் ஃபத்தா நகரில் சாலை அமைக்கும் வேலை நடைபெற்று வந்தது.

அந்த பகுதியை சார்ந்த ஸ்மிரிகோனா தாஸ் என்ற ஆசிரியை வீட்டு முன் அமைக்கவுள்ள சாலை 12 அடி அகலமாக இருக்கும் என முதலில் கூறினர்.அதற்கு ஸ்மிரிகோனா தாஸ் அனுமதி கொடுத்தார்.

ஆனால் சாலையை 24 அடிக்கு அகலப்படுத்த முடிவு செய்ததால் அதற்கு ஸ்மிரிகோனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் அமல் சர்கார் தலைமையில் சில ஆண்கள் ஸ்மிருதிகோனாவின் முழங்காலில் கயிறை கட்டி ரோட்டில் இழுத்து சென்று உள்ளனர்.

அதை தடுக்க வந்த அவரது சகோதரி சோமா தாசையும் அந்த கும்பல் ஸ்மிருதிகோனா போல போல கட்டி இழுத்து சென்றனர்.

இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் திரிணாமுல் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அர்பிதா கோஷ் பஞ்சாயத்து தலைவர் அமல் சர்க்காரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.