இரவு உணவுக்கு கொத்து வாங்கிய பயணி! காத்திருந்த அதிர்ச்சி

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு பயணித்த பஸ் ஒன்று இரவு உணவுக்கு நிறுத்திய போது பயணி ஒருவர் அங்கிருந்த உணவகம் ஒன்றில் இறைச்சி கொத்து வாங்கி உண்ண முற்பட்டுள்ளார்.

இதன்போது அந்த கொத்தில் இறைச்சி துண்டுகளுடன் எலியின் தலைத்துண்டு இருந்ததை அவர் அவதானித்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் அது தொடர்பில் குறித்த உண்வகத்தில் கேள்விகள் எழுப்பிய போது உணவக உரிமையாளர்கள் வழமையான காரணங்களை கூறி அவரை சமாதானம் செய்துள்ளனர்.

இந்நிலையில் பஸ்ஸில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது ஆதங்கத்தினை முகநூல் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது, நாம் இது போன்று எத்தனை விழிர்புணர்வு பதிவுகளை மக்களுக்கு மத்தியில் கொண்டு சேர்ந்தாலும் மக்கள் மீண்டும் மீண்டும் அவர்களின் கடைகளை நாடி செல்லுவது தான் வியப்பாக இருக்கின்றது.

உண்மையான எமது தமி்ழ் உறவுகளே நீங்கள் திருந்த வாய்ப்பே கிடையாது. அப்படி இருந்திருத்தால் கருத்தடை மாத்திரை இட்ட போதே நீங்கள் திருத்தி இருப்பீர்கள் என அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார பரிசோதனை காரியாலத்துக்கு அனுப்பட்டுள்ளதாகவும் இனி அவர்களின் செயற்பாடு என்ன என்பதை பொறுத்தித்துதான் பார்க்க முடியும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

குறிப்பு:- இரவில் பயணம் செய்பவர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்தே உணவை எடுத்து செல்லுங்கள். அல்லது இவ்வாறான உணவகங்களில் உணவு வாங்குவதை தவிருங்கள். இது பயணிகளுக்கு மட்டுமான அறிவுறுத்தல் அல்ல. பஸ் சாரதிகள் மற்று நடத்துனர்களுக்கும் தான். ஏனெனில் உங்களை நம்பியே பயணிகள் பயணங்களை தொடர்கின்றார்கள்.

தரமான உணவகங்கள் எது என பயணிகளை விட உங்களுக்கு அதிகம் தெரியும். அத்துடன் பயணிகளின் பாதுகாப்பு மட்டுமல்ல அவர்களது ஆரோக்கியமும் உங்களை நம்பியே இருகின்றது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.