காதலனுடன் தனிமையில் இருந்த மனைவி.. குறுக்கே வந்த கணவனை மனைவி செய்த கொடூரம்..!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டம் போட்டு கழுத்தை அறுத்த சம்பவம் கோவை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள மணியக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவ5ர் வெல்டர் குமார். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

சங்கீதா உடையாம்பாளையத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். குமாருக்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்கிடையே சங்கீதா குடியிருந்த வீட்டிற்கு பால் ஊற்ற வரும் கோவையை அடுத்த கொண்டயம்பாளையம் பகுதியை சேர்ந்த பால்காரன் பிரபு என்பவருடன் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது கணவர் செய்யும் கொடுமைகளை பிரபுவிடம் அடிக்கடி சங்கீதா புலம்பியிருக்கிறார். அதற்கு பிரபுவும் ஆறுதல் கூறி வந்துள்ளார். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாற, இருவரும் செல்போன் மூலம்பேசி தங்களது காதலை வளர்த்துள்ளனர். மேலும், அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் சங்கீதா அவரது கணவரை பிரிந்து, தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். கணவர் குமார் பலமுறை சேர்ந்து வாழ சங்கீதாவை அழைத்தும், அவர் வர மறுத்துவிட்டார்.

எனினும், கள்ளக்காதலன் பிரபுவுடன் தன் உறவை தொடர்ந்த சங்கீதா, வெளியில் சென்று தனிமையில் இருந்து வந்துள்ளார். மேலும் சங்கீதா, பிரபுவிடம் தனது கணவர் அடிக்கடி தன்னை சந்தித்து, மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என்று தொந்தரவு செய்துவருவதாக தெரிவித்துள்ளார்.

இதனால், இருவரும் சேர்ந்து குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். நேற்று பிரபுவும், சங்கீதாவும் இணைந்து மணியக்காரன் பாளையம்பகுதியில் உள்ள குமார் வீட்டிற்கு சென்றுள்ளனர். பூட்டியிருந்த கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த இருவரும், குடிபோதையில் தூங்கிகொண்டிருந்த குமாரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இதையடுத்து, கழுத்து பகுதியில் வெட்டுப்பட்டு காயமடைந்த குமார் வீட்டை விட்டு வெளியில் தப்பி ஓடி வந்தார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம்பத்தினர், ரத்தகாயங்களுடன் உயிருக்குப்போராடிய குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, குமாரை கொலை செய்ய முயற்சி செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்ற சங்கீதா மற்றும் அவரது கள்ளக்காதலன் பிரபு ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.