யோஷித்தவுக்கு அடித்தது ராஜயோகம்

கடற்படையில் பணியாற்றிவரும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ச அரசியலில் பிரவேசிக்கவுள்ளார்.

அவர் தற்போது கடற்படைப் பணிகளில் இருந்து முழுமையாக விலகி பிரதமர் அலுவலகத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், காமினி செனரத் வகித்த பிரதமர் அலுவலகப் பணியாளர்களின் பிரதானி பதவிக்கு யோஷித்த ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதன் பின்னர் நடைபெறவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலில் அவர் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகின்றது.

யோஷித்த ராஜபக்ச கடற்படையிலிருந்து ஒரேடியாக அரசியலுக்கு நுழைவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

அவருடைய ஜாதகக் குறிப்பில், இராஜயோகம் இருப்பது தெரியவந்ததை அடுத்து குடும்ப அங்கத்தவர்கள் இந்த யோசனையை வழங்கியிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.