கனடாவில் இருக்கும் இலங்கை குடும்பம் நாடு கடத்தப்படவுள்ள இறுதிக் கட்டத்தில்

கனடாவில் இருக்கும் இலங்கையை சேர்ந்த குடும்பம் நாடு கடத்தப்படவுள்ள நிலையில், அவர்களின் 9 வயது மகன் அமைச்சருக்கு இலங்கை செல்ல விருப்பமில்லை என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ளான்.

இலங்கையை சேர்ந்த தம்பதியான Nishan Fernando மற்றும் Sulakshana Hewage கடந்த 2012-ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறி கனடாவிற்கு குடிபெயர்ந்தனர்.

இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். அதில் இ ரண்டு குழந்தைகள் கனடாவிற்கு வந்த பின்பு பிறந்தாகவும், அதில் ஒரு குழந்தை பிறந்து 15 மாதம் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Nishan Fernando-வின் மாமாவுடன் இருக்கும் பிரச்சனை,காரணமாக அவருக்கு பயந்தே நாங்கள் பாதுகாப்பான இடத்தை தேடி கனடாவிற்கு அகதிகளாக வந்ததாகவும், தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது இவர்களுக்கு இலங்கையில் எந்த ஒரு ஆபத்தும் இல்லை, தாக்குதல் நடத்தியதற்கான எந்த ஒரு சரியான ஆதரமும் இல்லை, என்று நீதிமன்றத்தால் கடந்த 2018-ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த தம்பதினர் மேலும் இது குறித்து பரிசீலிக்குமாறு விண்ணப்பித்துள்ளனர். இது தொடர்பான விசாரணை உள்ளது.

இருந்த போதிலும் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாத காரணத்தினாலும், நீதிமன்றத்தின் நடவடிக்கையினாலும், இவர்கள் வரும் மார்ச் மாதம் 3-ஆம் திகதி நாடு கடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் Nishan Fernando-வின் 9 வயது மகன் Maneth Fernando கனடாவின் குடிவரவு அமைச்சருக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், கனடா மிகவும் பாதுகாப்பான இடம், இங்கு நிறைய பள்ளிகள் நல்ல நண்பர்கள் இருக்கின்றனர். இதை விட்டு நான் இலங்கை சென்றால் அங்கிருக்கும் குழந்தைகள் நான் பேசும் மொழியை பார்த்து சிரிப்பார்கள், ஏனெனில் நான் ஆங்கிலம் தான் பேசுவேன், அதுமட்டுமின்றி என்னுடைய பெற்றோருக்கும் ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளான்.

இந்த கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. இலங்கைக்கு Nishan Fernando-வின் குடும்பத்தினர் விரைவில் நாடு கடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், சிறுவனின் இந்த கடிதத்தால் அதிகாரிகள் மனது மாறுமா? நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படுமா? என்பது தெளிவாக தெரியவில்லை.

அதே சமயம் Nishan Fernando கனடாவில் ஒரு தொழிலாளி என்ற நிலையை கடந்த 2016 வரை தக்க வைத்துக் கொண்டார். மனிதாபிமான மற்றும் இரக்கமுள்ள அடிப்படையில் நிரந்தர வசிப்பிடத்திற்கான விண்ணப்பம் தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் அது கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் மறுக்கப்பட்டது. இலங்கையில் பாதுகாப்பு அபாயத்திற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கனட அரசாங்கம் கூறியிருததுது குறிப்பிடத்தக்கது.