கிளிநொச்சியில் அரசியல்வாதி ஆதரவாளரால் அரங்கேறிய அராஜகம்! மாணவன் வைத்தியசாலையில்

கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரப் பிரிவு இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர் என கூறப்படும் நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி திருநகர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் மாணவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இன்று பாடசாலைக்கு சென்று வீடு திரும்பியபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மாணவனின் தந்தைக்கும் குறித்த அரசியல் வாதிக்குமிடையில் அரசியல் ரீதியான கருத்து முரண் இருப்பதாகவும் , பல மாதங்களுக்கு முன்னர் தமது கட்சிக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் எவ்வாறு கிளிநொச்சியில் வாழபோகின்றீர்கள் என அச்சுறுத்தியமைக்கு அமைவாக இன்று அவரது மகனை தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கல்வியில் முதன்மை நிலையில் உள்ள மாணவர்களில் எனது மகனும் ஒருவர் அவரின் கல்வியை குழப்பும் முகமாக இவ்வாறான நடவடிக்கைகளை செய்து வருகின்றதாக கவலை வெளியிட்ட தந்தை, தனது மகனுக்கு நடந்த அநீதி எவருக்கும் நடக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மெற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கபடுகின்றது.