இலங்கை நாடாளுமன்றம் இன்னும் இரண்டு வாரங்களில் கலைக்கப்படவுள்ளதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அத்துடன் இதற்கு பிரதான கட்சிகள் இணக்கம் வெளியிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
19ஆவது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை மார்ச் 02ஆம் திகதியே கலைக்க முடியும்.
எனினும் அதற்கு முன்னர் கலைப்பதாயின் பிரதான கட்சிகளின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம்.
இந்நிலையில் பெரும்பான்மை ஒத்துழைப்பை வழங்க பிரதான கட்சிகள் இணங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி இன்னும் இரு வாரங்களில் சபை கலைக்கப்பட்டு ஏப்ரல் நடுப்பகுதியில் அதாவது, சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த அரச உயர்மட்டம் எதிர்பார்ப்பதாக அறியமுடிகின்றது.






