இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 15,000 பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

இலங்கையில் சுமார் 15,000 இற்கும் அதிகமான பொருட்களுக்கான விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான இந்த அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்துள்ளது.

இந்த விலை குறைப்பு சம்பந்தமாக பொருட்களை தயாரிக்கும், இறக்குமதி செய்யும் நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்கள் அதிகாரசபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளன.

அதற்கமைய குறித்த பொருட்களின் பெயர்கள் மற்றும் விலைகள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை விசேட பகுப்பாய்வு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறான பொருட்களின் பெயர்கள் மற்றும் விலைகள் தொடர்பில் வெகு விரைவில் நுகர்வோருக்கு பத்திரிகையூடாக தெரியப்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை சம்பந்தப்பட்ட நிறுவனங்களை கேட்டுள்ளது.

கட்டுமானப் பொருட்கள், உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் அரசின் வரி நிவாரண கொள்கைக்கமைய குறைக்கப்படவுள்ளன.