மணமகளின் சேலை பிடிக்கவில்லை!… இரவோடு இரவாக மாப்பிள்ளை தப்பியோட்டம்

கர்நாடகாவின் ஹாசன் என்ற கிராமத்தில் மணபெண்ணின் சேலை சரியில்லையென்று திருமணமே நின்று போன அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஹாசன் என்ற கிராமத்தை சேர்ந்த பி.என்.ரகுமார் மற்றும் பி.ஆர்.சங்கீதா ஆகியோர் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர்.

இருவீட்டாரும் இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்து திருமணம் வரை சென்றுள்ளது.

ரகுகுமார் – சங்கீதா ஜோடிக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் திருமணத்திற்காக பெண் வீட்டார் எடுத்த சேலை தரமாக இல்லை, அதை மாற்ற வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் கூறி உள்ளனர்.

ஆனால் அதனை ஏற்க பெண்வீட்டார் மறுத்துவிட்டனர். இதனால் கோபமடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு முதல் நாள் திருமண மண்டபத்திலிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

இந்த சம்பம் அப்பகுதியில் கடும் பரபரப்பினையும், வியப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.