விடிய விடிய நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை கேட்ட கேள்விகள்.. வெளியே வராத பல கோடி சொத்து மதிப்புகள்..!

நடிகர் விஜய் வருமான வரித்துறை சோதனைக்காக மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்து கடந்த நாட்களுக்கு முன் அழைத்து சென்றனர். பிகில் படம் தொடர்பான வசூல், அதில் மறைக்கப்பட்ட வரி ஏய்ப்பு, விஜய் பெற்ற சம்பளம் உள்ளிட்ட பல கேள்விகள் விஜய்யிடம் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் பிலிம்ஸ் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கணக்கில் வராத ஏராளமான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஐடி., ரெய்டால் இரண்டு நாட்களாக மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்காத சூழலில் இருந்தார் விஜய்.

இதையடுத்து, நடிகர் விஜய்-யை நெய்வேலியில் சென்னைக்கு காரில் அழைத்து வரும் கேப்பில் பெரிய ஆப்புகளை வைத்துள்ளது வருமான வரித்துறை. நெய்வேலியில் இருந்து இருந்து அழைத்து வரும் போது லண்டனிலுள்ள நடிகர் விஜயின் மாமனார் சொர்ணலிங்கத்தை பற்றி பேசியுள்ளனர்.

அதில், லண்டன், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் சொர்ணலிங்கம் மற்றும் அவரது மகளும் விஜய்யின் மனைவியுமான சங்கீதாவின் பெயரிலும் உறவினர்கள் பெயரிலும் வாங்கிப்போட்டுள்ள ஹோட்டல், சூப்பர் மார்க்கெட், ஜுவல்லரி கம்பெனி உள்ளிட்ட ஷேர் மார்கெட்டில் வாங்கி குவித்துள்ள பங்குகள் குறித்து அதிகாரிகள் லிஸ்ட் போட்டுள்ளனர்.

அதாவது ஆயிரத்து 200 கோடிகளுக்கும் மேலாக சொத்துக்கள் மற்றும் சர்வதேச வங்கிகளில் கடன் வாங்கி குவித்த சொத்துக்கள் சென்னை, இலங்கை, மும்பை, கூர்க் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களின் ஆவணங்களை கணக்கில் காட்டப்படாத பல நூறு கோடிகள் ரொக்கம், ரூ.350 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க – வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒவ்வொன்றாக காட்ட ஒரு கணம் கிடுக் ஆகியுள்ளார் விஜய் என கூறுகிறார்கள்.

இதையெல்லாம் தோண்டி துருவினால் உங்க நிலைமை மோசமாகி விடும் என கூற இதெல்லாம் என்னுடைய 25 வருட உழைப்பு என கூறியுள்ளார் விஜய். அதையெல்லாம், நாங்கள் பாத்துக்கொள்கிறோம். மேலும், நீங்கள் ஜேப்பியார் மகள் ரெஜினாவுடன் தொடர்பில் இருப்பது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் நன்கொடை மற்றும் கட்டணங்கள் ரொக்கமாகவே அதாவது கணக்கில் காட்டாத கருப்பு பணமாகவே வசூல் செய்துள்ளனர்.

இந்த பணங்களை பல்வேறு அறக்கட்டளைகள் மூலமாக வெள்ளையாக மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. கிறிஸ்தவ மிஷினரிகள் உங்கள் மூலமாக தான் பல்வேறு முறையில் நிதி திரட்டி அனுப்பி வைப்பதாக கூறுகிறார்கள்.

அதற்க்கான ஆதாரங்கள் பலவற்றை சேகரித்து வருகிறோம். நன்கொடை என்ற பெயரில் மதம் மாற்றுவதற்காக பணம் கொடுக்கக்கூடாது எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும் என விடிய விடிய அவரின் வீட்டில் வைத்து விஜய்க்கு வகுப்பு எடுத்துள்ளனர். இதனால் வருமான வரித்துறை சோதனை விஜயிடம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.