நீங்கள் ஏன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்? ரணிலிடம் மகிந்த கேட்ட கேள்வி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பிரதமரை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நீங்கள் நல்ல வாக்கு வீதத்தை பெற்றுள்ளதால், நீங்கள ஏன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறியுள்ளார். எவராவது கூறுகிறார்கள் என்று நீங்கள விலக வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார். 44 வீத வாக்குகளையே பெற்றுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த தனித்து போட்டியிட்டார். நாங்கள் பல கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு 51 வீதத்திற்கு மேலான வாக்குகளை பெற்றோம்.

இம்முறை தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. தேர்தலில் தனித்து போட்டியிட்ட எமது கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த வாக்கு வீதத்தை கணித்தால் எமது வாக்கு வீதம் 55 வீதத்தை காண்டியுள்ளது.

மேலும் தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும் எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நீங்கள் ஏன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்? ரணிலிடம் மகிந்த கேட்ட கேள்வி