யாழில் 30 வருடங்களின் பின் இடம்பெற்ற திருவிழா..! கண்ணீரில் கரைந்த மக்கள்..!

யாழ்.காங்கேசன்துறை- மாம்பிராய் ஞான வைரவா் ஆலயத்தின் வருடாந்த திருவிழா 30 வருடங்களின் பின் இன்று நடைபெற்றது.

1990ம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக 28 ஆண்டுகள் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் குறித்த பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயமாக வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து 2018ம் ஆண்டு மக்களை மீள் குடியேற்றத்திற்காக குறித்த பகுதி விடுவிக்கப்பட்டிருந்தது, எனினும் அங்கிருந்த மாம்பிராய் ஞானவைரவர் ஆலயம் இடித்து அழிக்கப்பட்டுருந்தது.

இந்நிலையில் அழிக்கப்பட்ட ஆலயத்தை பிரதேச மக்கள் தமது சொந்த முயற்சியில், புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வரும் பிரதேச மக்களின் நிதிப் பங்களிப்பிலும் ஞானவைரவர் புதுப் பொலிவுடன் கட்டி முடிக்கப்பட்டடு கடந்த 29ம் திகதி எண்ணைக் காப்பு சார்த்தி 30ம் திகதி கொடியேற்றத் திருவிழா ஆரம்பமானது.

அந்தவகையில் இன்று பதினொராம் நாள் தேர்த் திருவிழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேரில் மாம்பிராய் ஞானவைரவர் ஏறி வலம் வந்த காட்சி அம் மக்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்க, அரோகராச் சொல்லி ஆர்ப்பரிக்க தேர்த் திருவிழா இனிதே இடம்பெற்றது.