மகனை காண அவசரமாக சென்ற முதியவரை 7 வருடங்கள் சிறையில் அடைத்த கனவான்கள்..!

2500 ரூபாய் பணத்தை செலுத்த முடியாமல் கடந்த 7 வருடங்களாக சிறையில் இருந்த முதியவர் ஒருவர் சுதந்திர தினத்தில் ஜனாதிபதியால் விடுதலை செய்யப்பட்ட்டுள்ளார்.

இந்நிலையில் அவருடைய கதை தற்போது இலங்கை சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அந்த முதியவர் பகிர்ந்துகொண்ட தகவல்,

எனது மூத்த மகன் கொழும்பில் மேசன் வேலை செய்து கொண்டிருந்தார். அவருடைய மனைவி அவரை விட்டுச் சென்றதன் பின்னர் அவரது பிள்ளைகளையும் நானும் மனைவியும்தான் பராமரித்து வந்தோம்.

ஏழு வருடங்களுக்கு முன்னர் அன்றொருநாள் செய்தி வந்து சேர்ந்தது. மூத்தமகன் வேலை செய்யும் போது பலஞ்சியிலிருந்து விழுந்துவிட்டார் என்று நான் அணிந்திருந்திருந்த ஆடையுடன் மகனிற்கு என்ன நடந்ததோ என்று பதறிப்போய்கொழும்பு வரும் ரயிலில் ஏறிக் கொண்டேன். அப்போது என்னிடம் பணம் இல்லை என்பது கூட எனது நினைவிருக்கவில்லை. என்னுடைய துரதிர்ஷ்டம் ரயில் டிக்கெட் பரிசோதனைக்காரர் அந்த சமயம் பார்த்து அங்கே வந்துவிட்டார்.

டிகெட்டைக் கேட்டார்.டிக்கெட் இல்லாத காரணத்தினால் அடுத்த ஸ்டேஷனில் என்னை ஒப்படைத்தார்.அதன்போது எனது நிலைமையை எவ்வளவு தெளிவுபடுத்தியும் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

நீதிமன்றத்தில் ஒப்படைத்து 2500/- தண்டப்பணமும் விதித்தார்கள். குறித்த தண்டப்பணத்தை செலுத்துவதற்கென கையில் ஒரு சதம் கூட இல்லாத நிலையில். நான் எங்கே பணத்தைத் தேடிச் செலுத்துவது ? சிறையில் அடைத்தார்கள்!

ஏழு வருடங்களுக்குப் பின்னர் இ சுதந்திர தினத்தில் விடுதலை கிடைத்துள்தை இட்டு மகிழ்வாக உள்ளபோதும், இந்த ஏழு வருடங்களில் எனது மனைவி, மூத்த மகனுக்கு என்ன ஆனதென்று எதுவும் தெரியவில்லை என அந்தமுதியவர் கவலையுடன் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..