கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடுவிய கொரோனா வைரஸ் – இளம் யுவதி பாதிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பெண் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் காணப்படுவதனால் அவரை அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இந்த பெண்ணை பரிசோதனை செய்த அநுராதபுரம் வைத்தியசாலை வைத்தியர்கள், முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக முடிவுக்கு வந்துள்ளமையினால் அவரை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அவரது இரத்த மாதிரியை சோதனையிட்ட போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய அவரை அங்கொடை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இன்னமும் கொழும்பு வைத்தியசாலை இதனை உறுதி செய்து அறிவிக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வரவேற்பு பிரிவில் பணியாற்றும் 24 வயதுடைய யுவதியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த யுவதியின் குடும்ப உறுப்பினர்களும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என ஆராயப்பட்டு வருகிறது.