பொதுத்தேர்தலில் யாருக்கு வெற்றி ?வெளியானது ரகசிய அறிக்கை!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளில் யாருக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கப்போகும் என்ற இரகசிய கணிப்பீட்டு அறிக்கை ஒன்று அம்பலமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் கரங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதன்படி பொதுதேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு 130 தொடக்கம் 135க்கு இடைப்பட்ட ஆசனங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பொதுஜன முன்னணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்றும் அந்த அறிக்கையில் உறுதிபட தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசின் சில செயற்பாடுகளில் பொதுஜன முன்னணியின் நிறுவுனர் பஸில் ராஜபக்ஷ அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக உர மானியத்திற்குப் பதிலாக இலவச உரத்தை வழங்குவதாக ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய வாக்குறுகி வழங்கியிருந்த போதிலும் அது இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்பதால் விவசாய மக்கள் மட்டுமன்றி பொது மக்களின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்.

இது தொடர்பிலேயே பஸில் ராஜபக்ஷ மேலிடத்திற்கு அதிருப்தி தெரிவித்துள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகிறது.