கோட்டாபயவின் அதிரடி உத்தரவால் பல கிராமசேவகர்கள் சிக்கினர்! தமிழ் பகுதி கலக்கத்தில்…

கிராமசேவகர்களின் நடவடிக்கைகள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கையை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விசாரணைக் குழு நேற்று ஆரம்பித்தது.

நேற்று நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் பல கிராமசேவகர்கள் சிக்கியுள்ளனர்

அமைச்சின் கண்காணிப்பு குழு நேற்று முதற்கட்டமாக கொழும்பில் ஒரு பாரிய கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, 200 க்கும் மேற்பட்ட கிராம சேவகர் அலுவலகங்களில் அவர்கள் திடீர் கண்காணிப்பை மேற்கொண்டனர்.

கிராமசேவர்கள் தங்கள் கடமைகளை திறம்படச் செய்கிறார்களா அல்லது பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறார்களா என்பதைக் கவனத்தில் கொள்ள இந்த சோதனை நடத்தப்பட்டது.

நேற்று காலை 8.30 மணியளவில், இந்த குழு கொழும்பு மாலிகாவத்த, கொழும்பு கிழக்கு மற்றும் கெத்தாரம மேற்கு பகுதிகளில் உள்ள கிராமசேவகர் அலுவலகங்களிற்கு இந்த குழு சென்றது.

பல கிராம சேவகர் அலுவலகங்களில் மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தாலும், கிராம சேவககர்கள் அங்கு வரவில்லை என்பதைக் கண்டறிந்தனர்.

காலை 9.30 க்குப் பிறகு மட்டுமே அவர்களின் அலுவலகங்களுக்கு வந்திருந்தது. இருப்பினும், காலை 11.00 மணிக்கும் அலுவலகங்களிற்கு வராத கிராமசேவகர்களும் அடையாளம் காணப்பட்டனர்.

பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் மற்றும் அவர்களின் பொறுப்புகளை மீறும் இந்த கிராம சேவக அதிகாரிகள் தொடர்பான அறிக்கையை இந்த சிறப்பு குழு தொகுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை பொது நிர்வாக அமைச்சக செயலாளரிடம் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு, இதுபோன்ற தவறான கிராம சேவகர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சான்றிதழ்கள் மற்றும் பிற தேவைகளைப் பெற வந்த பலர் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டது. சில சந்தர்ப்பங்களில், கிராம சேவகர்கள் இல்லாததால் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ன்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊழலை அரச சேவையிலிருந்து ஒழிப்பதற்கும், மேலும் திறமையான மற்றும் நேர்மையான பொது சேவையை வழங்குவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு இது இடையூறை ஏற்படுத்துகிறது என்றார்கள்..

பொது நிர்வாக அமைச்சு கொழும்பு மாவட்டத்தில் இந்த விசாரணையைத் ஆரம்பித்துள்ளனர். கடமைகளை திறமையாகவும் நேர்மையாகவும் செய்யாத கிராம சேவகர்களை கைது செய்ய நாடு முழுவதும் இதேபோன்ற ஆய்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடைமுறை உடன் அழுலுக்கு வர உள்ளமை குறிப்பிடத் தக்கது.

ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவின் பேரில் நடைமுறைப்படுத்தப்படுகிறது இந்த திட்டம்.

அது மட்டமல்லாது வடக்கு – கிழக்கில் 90வீதமான கிராமசேவகர்கள் கடமை நேரத்தில் விவசாயம் செய்வது – சந்தையில் பொருட்கள் வாங்குவது – பிள்ளைகளை பாடசாலைகளிற்கு ஏற்றி இறக்குவது என வீட்டு வேலை செய்வது நிரூபனம் ஆகியுள்ளது.

குறிப்பாக வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் கிராம சேவையாளர்கள் தமது சேவைகளை சரியாக வழங்காததுடன் மக்களை மனிதாபிமானத்துடன் நடாத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

விரைவில் பல தமிழ் கிராம சேவையாளர்கள் வேலை இழந்து வீடு செல்வார்கள் என கோட்டாபயவின் இத் திட்டத்திற்கு பெறுப்பாக உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத முக்கிய அதிகாரி தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் சகல ஆதாரங்களும் திரட்டப்பட்டுள்ளன அதன் அடிக்கடையிலேயே இந்த திட்டம் முன் நகர்த்த பட உள்ளதுடன் இதில் யாழ்க்காணம் – மட்டக்களப்பு – முல்லைத்திவு – மன்னார் பகுதிகள் தொடர்பில் அதிகளவு ஆதாரங்கள் உள்ளதாகவும் உறுதிப்படுத்தினார்.