அந்தரங்கப் படங்களை முகநூலில் பதிவேற்றுவேன்…யாழில் சிறுமியை மிரட்டிய நபர்!

சிறுமி ஒருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதுடன் அதனை புகைப்படம் எடுத்து முகப்பு த்தகத்தில் பதிவிடுவேன் என அச்சுறுத்திவந்த இளைஞனை மானிப்பாய் பொலிஸாா் கைது செய்துள்ளனர்.

வலி,தென்மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

சிறுமியை காதலிப்பதாக கூறி குறித்தஇளைஞர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் கூரப்படுகின்றது.

இந்நிலையில் , அவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து விடயத்தை வெளியில் சொன்னால் அந்தரங்கப் படங்களை முகநூலில் பதிவேற்றுவேன் என குறித்த நபர் சிறுமியை அவர் அச்சுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து, குரித்த இளைஞன் மடக்கிப் பிடிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக பரிசோதனைகளிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைதான இளைஞனை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like