வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த மகன்… அடித்தே கொன்ற தந்தை! சோகத்தின் பின்னணி இதுதான்

பிரான்சிலிருந்து விடுமுறைக்காக இந்தியா வந்த மகனை சொத்து தகராறில் தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் குமார். இறால் ஏற்றுமதி தொழில் செய்து வரும் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் ரஞ்சித் பிரெஞ்சு குடியுரிமை பெற்று, தனது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி விடுமுறைக்காக ரஞ்சித் தனியாக புதுச்சேரி வந்துள்ளார். பிரான்சில் இருந்து வந்ததில் இருந்தே தனது தந்தை குமாரிடம் 2 கோடி ரூபாய் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் குமார் சொத்தை பாகம் பிரித்து பணம் தருவதாக ரஞ்சித்திடம் கூறியுள்ளார்.

ஆனாலும் இதனை ஏற்றுக்கொள்ளாத ரஞ்சித் தினமும் மதுவருந்திவிட்டு தந்தையிடம் சண்டையில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்றும் தனது தந்தையுடன் சண்டையிட்ட ரஞ்சித், ஒரு கட்டத்தில் தாயை தலையனையால் அழுத்தி தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை குமார் கரப்பான்பூச்சி மருந்தினை எடுத்து ரஞ்சித்தின் முகத்தில் அடித்துள்ளார்.

இதில் மயக்கமடைந்த ரஞ்சித்தை, விடாமல் கை மற்றும் கால்களைக் கட்டி கடுமையாக தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். பின்பு காவல்நிலையத்திற்கு சென்று தந்தை குமார் சரணடைந்துள்ளார்.

தற்போது காவல்துறையினர் தந்தை குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.