ஆர்வமும், லட்சியமும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார் மதுரையை சேர்ந்த காவ்யா.
காவ்யாவின் அப்பா ரவிக்குமார், அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
மதுரையில் இருக்கும்வரை சைக்கிள் ஓட்டக்கூட பயந்த காவ்யா தற்போது விமானங்களை ஓட்டி வருகிறார்.
சிறுவயதாக இருக்கும்போது விமானம் ஓட்டுவதலிருந்த தீராக் காதல், வழக்கமான பணிகளை தேர்வு செய்யாமல் மாறுபட்ட துறையை தேர்ந்தெடுத்தாராம்.
கடந்த, 2013ம் ஆண்டு 12ம் வகுப்பு முடித்ததும், பெங்களூரில் உள்ள, ஜக்கூர் விமான பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து, விமானங்கள் ஓட்ட பயிற்சி பெற்றார்.
இதையறிந்த உறவினர்கள்,பெண் பிள்ளைக்கு எதற்கு படிப்பு என விளாச, எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் லட்சியத்தைமட்டுமே குறிக்கோளாக கொண்டு படித்துள்ளார்.
இதற்காக அவரதுதந்தை தகுதிக்கு மீறி அதிகமாக கடன் வாங்கியதாகவும் குறிப்பிடுகிறார்.
பெங்களூர் பயிற்சி மையத்தில், 200 மணி நேர பயிற்சிக்கு பின், விமானத்தின் இரண்டு விமானிகளில் ஒருவராகவானில் பறந்ததுடன், தனியாக, விமானத்தை இயக்கியுள்ளார்.
அதன்பின்னர் லைசென்ஸ் கிடைத்ததும், தற்போது பயிற்சியாளராக மாறி மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதாகவும் பெருமிதம் கொள்கிறார் காவ்யா.