சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவித்ரா(23). டி.பார்ம் படித்துக் கொண்டிருந்த இவர், முகநூலில் விக்னேஷ்வரன் என்ற இளைஞரோடு நட்பாக பேசி வந்துள்ளார். விக்னேஷ்வரன் பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
விக்னேஷ்வரன் தனது பொழுதுபோக்கிற்காகவும், தொழிலை விரிவுபடுத்தவும் முகநூல் கணக்கு தொடங்கி பயன்படுத்தியுள்ளார். அப்பொழுது பவித்ரா அறிமுகமானதும் இருவரும் நண்பர்களாக பேசி, பின்பு காதலர்களாக மாறியுள்ளனர்.
இவர்கள் காதலிக்க ஆரம்பித்த தருணத்தில் விக்னேஷ்வரன் தான் சுமார் 4 அடி உயரம் மட்டுமே இருப்பதாக பவித்ராவிடம் கூறியதோடு, பவித்ராவின் பதில் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்துள்ளார்.
ஆனால் இதனை சிறிதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாத பவித்ரா, விக்னேஷ் உடனான காதலை உறுதியாக தெரியப்படுத்தியுள்ளார். இவர்களின் காதல் விவகாரம் குடும்பத்திற்கு தெரிந்ததும் பவித்ராவின் குடும்பத்தினர், விக்னேஷ்வரனைப் பார்த்து வேண்டாம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆனால் பெற்றோரின் எதிர்ப்பினை மீறிய பவித்ரா, வீட்டை விட்டு வந்து தனது காதலனை திருமணம் செய்துள்ளார். பவித்ராவின் பெற்றோர் இனி தங்களுக்கு மகளே இல்லை என்று மகளிர் காவல்நிலையத்தில் வைத்து தெரிவித்துவிட்டு கோபத்துடன் சென்றுள்ளனர்.
அதன்பின் விக்னேஷ்வரின் குடும்பம் இந்த காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டு, தங்களது வாழ்க்கையை தொடங்க சென்றுவிட்டனர். கதாநாயகர்கள், கதாநாயகியோடு ஒப்பிட்டு தங்களது காதலை ஆரம்பிக்கும் இந்த காலக்கட்டத்தில் இதுபோன்ற ஒரு சில நிகழ்வுகளே காதல் என்ற வார்த்தையை உயிர்பிக்கும் விதமாக இருக்கிறது.