கடையொன்றில் தாயும் மகளும் செய்த மோசடி! உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதி

புடைவைக் கடையொன்றில் திருடிக் கொண்டு சென்ற தாயும், மகளும் கையும் மெய்யுமுாக சிக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள புடைவை விற்பனை நிலையமொன்றில் நேற்று முன்தினம் நடந்தது.

இந்நிலையில் திருட்டு விவகாரம் அம்பலமானதையடுத்து, பெண்கள் இருவரும் கடை உரிமையாளரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது, அவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

இளம் தாயும், சிறிய மகளுமாக இருவர் கடைக்குள் நுழைந்து, ஆடைகள் தெரிவு செய்வதை போல பாவனை செய்துள்ளனர்.

நீண்டநேரமாக அவர்கள் செயற்பட்ட விதத்தில் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தின் பின்னர், திடீரென தாயும் மகளும் கடையை விட்டு வெளியேற முயன்றபோது சந்தேகமடைந்த கடை உரிமையாளர் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களின் பைகளை சோதனையிட வேண்டுமென கேட்டபோது தாயார் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

எனினும் பின்னர் அவர்கள் கடைக்குள் அழைத்துச் செல்லப்பட்டு சோதனையிடப்பட்டபோது, திருடப்பட்ட ஆடைகள் மீட்கப்பட்டன.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் பொலிசாருக்கு அறிவிக்க முயல்வதை அவதானித்த, தாயார், அங்கிருந்த கம்பம் ஒன்றை எடுத்து கடை உரிமையாளரை தாக்கியதுடன் , கடையின் கண்ணாடிகளையும் உடைத்து அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது அவர்கள் மடக்கி மடக்கிப்பிடிக்கபட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதேவேளை திருடிய பெண் தாக்கியதில், கடை உரிமையாளர் காலில் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், திருடிய பெண்கள் நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.