மட்டக்களப்பில் தொடரும் சோகம்… 5 நண்பர்களில் ஒருவரை துடி துடிக்க அடித்து கொலை.!

தன்முன் எமன் வடிவில் யானை வடிவில் வருவதை கண்டு சுதாகரித்து காடுகள் எங்கும் நாலாபக்க திசையில் ஐந்து, நண்பர்கள் ஓடி இறுதியில் ஓரிடத்தில் சந்தித்து அப்பாடா எப்படியோ தப்பித்தோம் என்று பெருமூச்சு விடும் போது,

தங்களோடு ஓடிய ஒருவரை காணாமல் மிரண்டு ஒருநாள் பூராக சோகத்துடன் தேடிய போது கால் இரண்டு எலும்புகளை உடைத்து இளம் குடும்பஸ்தரின் உயிரற்ற சடலமாக காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு தரவை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

09/02/2020 ஞாயிறு மதியம் மியாங்குளத்து ஆய வயலை பார்வையிடுவதற்காக மூன்று மோட்டார் சைக்கிளில் நண்பர்களான ஐந்து பேர் மாவடிவேம்பிலிருந்து சென்று,

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மாலை 04.00 மணியளவில் ஊர் நோக்கி திரும்பிவருகையில். தரவை ஆறாம் கட்டையில் வைத்து திடிரென காட்டு யானையொன்று வழிமறித்ததால்,

ராசலிங்கம் குமாரன் என்பவரது மோட்டார் சைக்கிளின் பின்னாலிருந்து வந்த கொம்மாதுரையை சேர்ந்த கணபதிப்பிள்ளை சுரேந்திரன் (38) என்பவர் அச்சம் காரணமாக மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி காட்டுக்குள் ஓடியுள்ளார்.

அதன் பின்னர் அவரோடு பயணத்தை தொடர்ந்தவர்களும் வெவ்வேறு திசைகளில் ஓடி ஓரிடத்தில் ஒன்று சேர்ந்த போதும், சுரேந்திரன் என்பவர் வந்து சேரவில்லை.

பல இடங்களிலும் தேடிவிட்டு நேற்று (10/02)திங்களன்று காலையும் தேடியிருக்கிறார்கள். கண்டுபிடிக்க முடியாததால், நேற்றைய தினம் பிற்பகல் 01.00 மணியளவில்தான் காணாமல் போனவரின் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம் விடயத்தை தெரிவித்திருக்கின்றனர்.

அதன் பின்னர் சம்பவம் நடைபெற்ற காட்டுப்பகுதிக்குள் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் தேடுதலில் ஈடுபட்ட போதுதான் பிற்பகல் 04.00 மணியளவில் குறித்த காட்டுக்குள் இரு கால்களும் உடைந்த நிலையில் இவரது சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர்.

ஒன்பது வயதுடைய ருபிஸ்கா என்ற ஒரேயொரு பெண் பிள்ளையின் தந்தையான பத்தாம் கட்டை வீதி, கொம்மாதுறை, செங்கலடியை சேர்ந்தவராவர் என்பது தெரியவந்துள்ளது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like